பள்ளி வரலாறு
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி வரலாறு
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, ஆரம்பக்காலத்தில் சங்காட் எனும் தோட்டத்தில் 30 மாணவர்களோடு தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பிறகு, தோட்டத் துண்டாடலின் காரணமாக 1946ல் பெர்மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது. அப்போது, திரு.காளிதாஸ் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.
திரு.காளிதாஸ் அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு, திரு.பாவுல் ராஜ் தலைமையாசிரியராக பணியாற்றினார். அவ்வேளையில் தோட்டப்புறத்தில் அமைந்திருந்த இப்பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதியும் கிடையாது. பலகைக் கட்டத்தையும் தகரக்கூரையையும் கொண்ட இப்பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் பயின்று வந்தனர்.
1970 ஆம் ஆண்டுகளில் சிம்பாங் மோரிப் பகுதியில் வசித்து வந்த ஆசிரியர் திரு.செ.கைலாசம் மற்றும் இவ்வட்டாரப் பொது மக்களும் இப்பள்ளியை சிம்பாங் மோரிப் பகுதிக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பயனாக, அப்போதைய சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இருந்த டத்தோ ஹருன் அவர்களின் உதவியுடன் புதிய இடம் அடையாளங்காணப்பட்டது. 1976 ஆம் ஆண்டு 6 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. இப்புதிய கட்டடம் எழும்பிய பிறகு, இச்சுற்று வட்டார மக்களின் குழந்தைகள் அதிகமானோர் இப்பள்ளியில் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டது. ஓரளவு சில அடிப்படை வசதிகளைக்கொண்டு எழுப்பப்பட்ட இக்கட்டடம் கற்றல் கற்பித்தலுக்குப் பேருதவியாக அமைந்தது.
இப்பள்ளியில் பல தலைமையாசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு தலைமைத்துவத்திலும் பள்ளியில் பல மாற்றங்கள் காணப்பட்டன. இதனிடையே, மாணவர் எண்ணிக்கை உயர்வு கண்டதால் வகுப்பறைப் பற்றாக்குறை பிரச்சனை எழுந்தது. அதன் காரணமாக, 1978ல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணையோடு 3 வகுப்பறைகளைக் கொண்ட இணைக்கட்டடம் கட்டப்பட்டது. இந்த இணைக்கட்டடம் இப்பள்ளிக்கு மேலும் பல வசதிகளைக் கொண்டு வந்தது. 1990 ஆம் ஆண்டுகளில் இப்பள்ளி கோலாலங்காட் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளுள் ஒன்றாக உருவெடுத்தது. காலப்போக்கில் பல தலைமையாசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றியுள்ளனர். ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை உயர்வு கண்டதால் 2002ல் அரசாங்கம் 6 வகுப்பறைகள், அறிவியல் கூடம், நூலகம் மற்றும் கணினி அறை கொண்ட இரண்டு மாடிக் கட்டடத்தை எழுப்பியது. இக்கட்டடம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமைந்தது.
. 2014ல், சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய ரி.ம 90 000.00 செலவில் 41 கணினிகள் கொண்ட நவீன கணினி மையம் அமைக்கப்பட்டது. தற்போது பெ.ஆ.சங்கத்தின் உதவியோடு தனியார் கணினி ஆசிரியர் மாணவர்களுக்குக் கணினிக் கல்வியைப் போதித்து வருகிறார். தித்தியான் டிஜிட்டல் அமைப்பு இக்கணினிக் கல்வி போதனையைக் கண்காணிப்பதோடு இலவச கணினிக் கல்விப் பயிற்சிப் புத்தகங்களையும் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. கணினி ஆசிரியருக்கும் அவ்வப்போது பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
1976ல் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் கொண்ட முதல் கட்டடம்
1978ல் கட்டப்பட்ட இணைக்கட்டடம்
2002ல் கட்டப்பட்ட இரண்டு மாடிக்கட்டடம்
பாலர்ப்பள்ளி கட்டடம் - 2007
பள்ளிச் சிற்றுண்டிச்சாலை
பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்
மாணவர் எண்ணிக்கை
2005 – 2016
ஆண்டு | வகுப்பு எண்ணிக்கை | மாணவர் எண்ணிக்கை |
2005 | 6 | 178 |
2006 | 6 | 181 |
2007 | 7 | 205 |
2008 | 7 | 205 |
2009 | 7 | 200 |
2010 | 7 | 185 |
2011 | 7 | 180 |
2012 | 7 | 175 |
2013 | 7 | 170 |
2014 | 7 | 175 |
2015 | 7 | 175 |
2016 | 7 | 170 |
ஆசிரியர் எண்ணிக்கை
2005 – 2016
ஆண்டு | வகுப்பு எண்ணிக்கை | ஆசிரியர் எண்ணிக்கை |
2005 | 6 | 16 |
2006 | 6 | 16 |
2007 | 7 | 16 |
2008 | 7 | 16 |
2009 | 7 | 16 |
2010 | 7 | 16 |
2011 | 7 | 16 |
2012 | 7 | 16 |
2013 | 7 | 16 |
2014 | 7 | 16 |
2015 | 7 | 16 |
2016 | 7 | 16 |
யு.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகிதம்
2011 – 2015
ஆண்டு | முழுத்தேர்ச்சி (%) | 7A/8A |
2011 | 29.10 | 0 |
2012 | 39.28 | 0 |
2013 | 32.14 | 1 |
2014 | 48.10 | 1 |
2015 | 37.04 | 1 |
2016 | 66.67 | 1 |
பள்ளிச் சின்னம்
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளிப் பாடல்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கற்பதே எங்கள் மூச்சென்போம்
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளிக்கு
பெருமையை என்றும் நாட்டிடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கற்பதே எங்கள் மூச்சென்போம்
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளிக்கு
பெருமையை என்றும் நாட்டிடுவோம்
பெருமையை என்றும் நாட்டிடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கல்வி.. கல்வி எங்கள் மூச்சு
உண்மை உழைப்பு நேர்மையோடு
ஒழுக்கத்தில் நாங்கள் சிறந்திடுவோம்
உண்மை உழைப்பு நேர்மையோடு
ஒழுக்கத்தில் நாங்கள் சிறந்திடுவோம்
கல்வி கேள்வி விளையாட்டில்
சாதனை பலவும் நாம் படைப்போம்
கல்வி கேள்வி விளையாட்டில்
சாதனை பலவும் நாம் படைப்போம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கல்வி.. கல்வி எங்கள் மூச்சு
அன்னை தந்தை ஆசானோடு
கடவுளையும் நாம் போற்றிடுவோம்
தாய்த் திருநாடாம் மலேசியாவிற்கு
புகழை என்றும் சேர்த்திடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
தாய்மொழி தமிழை உயிரென்போம்
தரணியே போற்ற வாழ்ந்திடுவோம்
தாய்மொழி தமிழை உயிரென்போம்
தரணியே போற்ற வாழ்ந்திடுவோம்
உயர் நெறி பண்புகள் கொண்டேநாம்
உலகினில் உயர்வை அடைந்திடுவோம்
உயர் நெறி பண்புகள் கொண்டேநாம்
உலகினில் உயர்வை அடைந்திடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கற்பதே எங்கள் மூச்சென்போம்
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளிக்கு
பெருமையை என்றும் நாட்டிடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கற்பதே எங்கள் மூச்சென்போம்
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளிக்கு
பெருமையை என்றும் நாட்டிடுவோம்
பெருமையை என்றும் நாட்டிடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கல்வி.. கல்வி எங்கள் மூச்சு
உண்மை உழைப்பு நேர்மையோடு
ஒழுக்கத்தில் நாங்கள் சிறந்திடுவோம்
உண்மை உழைப்பு நேர்மையோடு
ஒழுக்கத்தில் நாங்கள் சிறந்திடுவோம்
கல்வி கேள்வி விளையாட்டில்
சாதனை பலவும் நாம் படைப்போம்
கல்வி கேள்வி விளையாட்டில்
சாதனை பலவும் நாம் படைப்போம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கல்வி.. கல்வி எங்கள் மூச்சு
அன்னை தந்தை ஆசானோடு
கடவுளையும் நாம் போற்றிடுவோம்
தாய்த் திருநாடாம் மலேசியாவிற்கு
புகழை என்றும் சேர்த்திடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
தாய்மொழி தமிழை உயிரென்போம்
தரணியே போற்ற வாழ்ந்திடுவோம்
தாய்மொழி தமிழை உயிரென்போம்
தரணியே போற்ற வாழ்ந்திடுவோம்
உயர் நெறி பண்புகள் கொண்டேநாம்
உலகினில் உயர்வை அடைந்திடுவோம்
உயர் நெறி பண்புகள் கொண்டேநாம்
உலகினில் உயர்வை அடைந்திடுவோம்
கல்வியே வாழ்வின் ஒளியென்போம்
கூகல் வரைபடத்தில் பள்ளி ……..
பள்ளித்திடல்
தற்காலிக்கக் கூட்ட அறை
மேடை / மண்டபம்
பள்ளி அலுவலகம்
பள்ளி நூலகம்
எண், எழுத்து மேம்பாட்டு மையம்
நூலகம்
கணினி மையம்
ஆசிரியர் அறை
Subscribe to:
Posts (Atom)
-
SJKT SIMPANG MORIB சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி PANDUAN PENULISAN UPSR (BAHASA MELAYU) DISE...
-
தமிழ்மொழி வார தொடக்க விழா மாறுவேடப்போட்டி ஆண்டு 1 மாணவர்கள் தமிழறிஞர்கள் மாறுவேடப்போட்டி - தமிழ்மொழி வாரம்