Minggu Bahasd Tamil தமிழ்மொழி வாரம் 2015
தமிழ்மொழி வார தொடக்க விழா
மாறுவேடப்போட்டி ஆண்டு 1 மாணவர்கள்
தமிழறிஞர்கள்
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு செல்சி காற்பந்து கிளப் ஏற்பாட்டில் ஒரு நாள் சிறப்புக் காற்பந்து பயிற்சி
கடந்த 27 ஜூன் 2015ல், டாமான்சாராவில் அமைந்துள்ள NPNG காற்பந்து விளையாட்டு மையத்தில், செல்சி காற்பந்து கிளப் ஏற்பாட்டில் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியைப் பிரதிநித்த 75 மாணவர்களுக்கும் 10 ஆசிரியர்களுக்கும் ஒருநாள் சிறப்புக் காற்பந்து பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் காற்பந்து பயிற்றுனர்கள் மிகச் சிறப்பாக வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சியின்போது காற்பந்து விளையாட்டைப் பற்றிய நுணக்கங்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியின் பிராதான விளையாட்டாக காற்பந்து விளங்குவதால், இவ்விளையாட்டில் மாணவர்களைப் பயிற்றுவிக்க சிறப்புப் பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு.கா.சண்முகம் தெரிவித்தார்.
இந்த ஒருநாள் சிறப்புக் காற்பந்து பயிற்சிக்கான ரி.ம 13,000.00ஐ EMKAY அறவாரியம் ஏற்றுக்கொண்டது. இவ்வாய்ப்பைச் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய EMKAY அறவாரியத்திற்கும் மலேசிய செல்சி காற்பந்து கிளப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பள்ளித் தலைமையாசிரியர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
-
SJKT SIMPANG MORIB சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி PANDUAN PENULISAN UPSR (BAHASA MELAYU) DISE...
-
தமிழ்மொழி வார தொடக்க விழா மாறுவேடப்போட்டி ஆண்டு 1 மாணவர்கள் தமிழறிஞர்கள் மாறுவேடப்போட்டி - தமிழ்மொழி வாரம்